தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர் மோதல்: பரீட்சைகள் ஒத்திவைப்பு!
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று அதிகாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நேற்று நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்கலைக்கழக நிர்வாகம், பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு 8:00 மணிக்குள் தங்களது விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தியது.
இதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை கோரியுள்ளது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பொலிஸாரும் பல்கலைக்கழக அதிகாரிகளும் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த மோதலில் காயமடைந்த பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

