மிரிஸ்ஸ கடற்கரையில் ஜேர்மன் சுற்றுலாப் பயணி கடலில் இருந்து மீட்பு!
ஜூன் 12 அன்று மாலை மிரிஸ்ஸ கடற்கரையில் கடலில் மூழ்க இருந்த 29 வயதுடைய ஜேர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என கொட்டவில பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
கடலில் ஏற்பட்ட பலமான நீரோட்டத்தில் சிக்கி, சுற்றுலாப் பயணி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டபோது, கடமையில் இருந்த அதிகாரிகள் அவரைக் கண்டனர். உடனடியாகச் செயல்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் அஜந்தா மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கஹவத்த ஆகியோர், அந்த நபரை பத்திரமாக கரைக்கு இழுத்து வந்து முதலுதவி அளித்தனர்.
தற்போது அவர் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

