சமுர்த்தி திணைக்களத்தின் மூன்று தசாப்தத்தை முன்னிட்டு காத்தான்குடி கடற்கரையில் சிரமதானம்..!

சமுர்த்தி திணைக்களத்தின் மூன்று தசாப்தத்தை முன்னிட்டு காத்தான்குடி கடற்கரையில் சிரமதானம்..!

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று தசாப்த கால நினைவுகள் மற்றும் மக்கள் பலத்துடனான வளமான ஒரு நாடு சமுர்த்தி தேசிய சிரமதான வேலைத்திட்டத்திற்கமைய காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவும் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகர சபையும் இணைந்து ஒழுங்கு செய்த சிரமதான நிகழ்வு காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது.

காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா கடற்கரைக்கு அடுத்து அதிகமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் கடற்கரைகளில் முக்கியமான காத்தான்குடி கடற்கரையில் இச்சிரமதான நிகழ்வில் நகர சபை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இரானுவத்தினர், ஜனாஸா நலன்புரி அமைப்பினர், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள் . சமுர்த்தி சமுதாய அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் பத்மா ஜெயராஜ்,சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.வாமதேவன், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சுபந்தினி கண்ணன், சமுர்த்தி வங்கி முகாமையார்கள், நகரசபை நிருவாக உத்தியோகத்தர் றினோஸா முப்லி மற்றும் நகர சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin