மன்னார் கடற்பரப்பில் 8 இந்திய மீனவர்கள் கைது..!

மன்னார் கடற்பரப்பில் 8 இந்திய மீனவர்கள் கைது..!

தலைமன்னாரை அண்மித்த கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, படகொன்றும் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் தலைமன்னாருக்கு அழைத்து வரப்படுவதாகவும்,

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin