இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த இந்திய நடிகர்..!

இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த இந்திய நடிகர்..!

திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கையில் வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் விஸ்வநாதன், இலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று (19) வருகை தந்தார். பிரதி சபாநாயகர் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியின் அழைப்பிற்கு அமைய, பிரபல நடிகர் மோகன்லால் உள்ளிட்ட குழுவினரும் சபாநாயகரின் கலரியில் இருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டார்.

இந்த விஜயத்தின் போது, ​​அவர் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன மற்றும் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இதன்போது கலந்துகொண்டார்.

Recommended For You

About the Author: admin