யாழ்ப்பாணத்தில் ‘கண்ணம்மா’ திரைப்பட சிறப்புத் திரையிடல்!

யாழ்ப்பாணத்தில் ‘கண்ணம்மா’ திரைப்பட சிறப்புத் திரையிடல்!

முற்றுமுழுதாக இலங்கை கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ள ‘கண்ணம்மா’ ஈழத் திரைப்படம், நாளை மறுதினம் (ஜனவரி 24, சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

ஈழப்போராட்டத்தினால் மக்கள் அனுபவித்த பாதிப்புகளையும், அதன் ஆழமான வலிகளையும் மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

2J மூவீஸ் தயாரிப்பில் யூட் சுகியின் இயக்கத்தில் உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்கு பிரசாந் கிருஷ்ண பிள்ளை இசையை வழங்கியுள்ளதுடன் படத்தொகுப்பை சிவநேசன் மேற்கொண்டுள்ளார்.

மூத்த கலைஞர்களான ராஜா மகேந்திரசிங்கம், ஜூட் கொலின்ஸ், சபேசன் சண்முகநாதன், கேப்டன் பாஸ்கரன், சுவிஸ் ரகு, ஜாஸ்மின் (பவுண் அக்கா), ஜீவேஸ்வரன் உள்ளிட்டவர்களுடன் பல இளம் கலைஞர்களும் இதில் நடித்துள்ளார்கள்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பில் பேசிய படக்குழுவினர், ஈழத்து படைப்புகளுக்குப் பொதுமக்கள் தங்களின் பேராதரவை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

ஈழப்போராட்டத்தின் வலிகளை வெறும் வணிக நோக்கோடும் பார்க்காமல், உண்மையான உணர்வுகளுடன் பதிவு செய்துள்ளதாகப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரசாந் கிருஷ்ண பிள்ளையின் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுபவம் வாய்ந்த மூத்த கலைஞர்களுடன், துடிப்பான இளம் கலைஞர்களின் நடிப்பு படத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

Recommended For You

About the Author: admin