யாழில் ‘கண்ணம்மா’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு!

யாழில் ‘கண்ணம்மா’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு!

முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்களிப்பில் உருவான ‘கண்ணம்மா’ திரைப்படம், யாழ்ப்பாணத்தில் தனது முதல் பயணத்தை மிகச்சிறப்பாக ஆரம்பித்துள்ளது.

நேற்றைய தினம் (சனிக்கிழமை, ஜனவரி 24, 2026) யாழ். ராஜா திரையரங்கில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல், ஈழத் திரைத்துறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

திரையரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் (Housefull) நடைபெற்ற இந்தத் திரையிடலில், படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்துள்ளன.

படத்தின் வெற்றிகரமான ஆரம்பத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்த திரையிடல்கள் எங்கே, எப்போது நடைபெறும் என்பது குறித்த விபரங்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்கவுள்ளனர்.

2J மூவீஸ் தயாரிப்பில் யூட் சுகியின் இயக்கத்தில் உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்கு பிரசாந் கிருஷ்ண பிள்ளை இசையை வழங்கியுள்ளதுடன் படத்தொகுப்பை சிவநேசன் மேற்கொண்டுள்ளார்.

மூத்த கலைஞர்களான ராஜா மகேந்திரசிங்கம், ஜூட் கொலின்ஸ், சபேசன் சண்முகநாதன், கேப்டன் பாஸ்கரன், சுவிஸ் ரகு, ஜாஸ்மின் (பவுண் அக்கா), ஜீவேஸ்வரன் உள்ளிட்டவர்களுடன் பல இளம் கலைஞர்களும் இதில் நடித்துள்ளார்கள்.

Recommended For You

About the Author: admin