“அமரன் படத்தை விட ஒரு படி மேல்” – ‘பராசக்தி’ குறித்து நடிகர் சிவகார்த்திகேயன்!
பொங்கல் பண்டிகையையொட்டி இன்று வெளியாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை ரசிகர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்தார்.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படம் இன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்து இருந்தது. 1960-களில் இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இதன்பின் U/A 16+ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியதை அடுத்து பராசக்தி இன்று ரிலீசானது.
தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், விஜயின் ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாத சூழலில், பராசக்தி படத்திற்கு திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 800 திரைகள் வரை பராசக்தி வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் சத்யம் திரையரங்கில் பராசக்தி திரைப்படம் பார்க்க வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டியளித்தார்

