கிளிநொச்சி மாவட்டத்தில் உலக உணவு திட்டத்தின் கீழ் இரண்டு நிகழ்ச்சி திட்டங்கள்..!
இந்நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 19. 06.2025 இன்று இடம் பெற்றது.
கிராமிய சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க,
பொது இயக்குனர் ராமமூர்த்தி, பொது இயக்குனர் நிலத்தி பெரேரா ,தேசிய உலக உணவு நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் முஸ்தபா நிஹமத் ,உலக உணவுத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் ,மாவட்ட அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் பங்குபற்றினர்
“சொத்துகளை உருவாக்குவதற்கான காசுக்கான வேலை திட்டத்தில் கரைச்சி பிரதேச செயலகத்தின் கீழ் நான்கு திட்டங்களும் கண்டாவளை பிரதேச செயலகத்தின் கீழ் இரண்டு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களை களவு விஜயம் மூலம் பார்வையிடுவதாக தெரிவிக்கப்பட்டது அத்துடன் “பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் “தொடர்பாகவும் அதன் முன்னேற்ற தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலின் பின்னராக மாவட்டச்செயலக நலன்புரிச்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தக்காளி செய்கையினையும் குழுவினர் பார்வையிட்டிருந்தனர்.


