தம்பலகாமம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது..!
உப தவிசாளர் தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கு.
தம்பலகாமம் பிரதேச சபையில் இடம்பெற்ற மும்முனைப் போட்டியில் ஐக்கி மக்கள் சக்தி கூடுதலான வாக்குகளைப் பெற்று தவிசாளரையும், உபதவிசாளர் பதவியை தமிழரசுக் கட்சிக்கு வழங்கி ஆட்சியமைத்தது.
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபையின் தெரிவுக்கான அமர்வு இன்று (19) வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. குறித்த தெரிவு திறந்த வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது ஐக்கியமக்கள் சக்திக்கு ஆதரவாக 8 வாக்குகளும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு ஆதரவாக 4 வாக்குகளும், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக 3 வாக்குகளும் கிடைக்கப் பெற்றதுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னனி தடுநிலைமை வகித்தது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆரதவாக அந்த கட்சியின் 3 உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 2 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சி, பொதுஜன முன்னனி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் சார்சாக தலா ஒரு உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.
அந்தவகையில் தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் காருன் தாலிப் அலி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உப தவிசாளராக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் விஜயகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


