மீண்டும் ஒளிரவுள்ள மண்முனை பாலம்…!
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் மிக நீண்ட காலமாக மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு செயலிழந்து காணப்படுகிறது.
இந்நிலையில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக அண்மையில் பதவி ஏற்ற இளையதம்பி கிரேஸ்குமார் அவர்கள் இன்றைய தினம்(19) குறித்த பாலத்துக்கு கள விஜயம் மேற்கொண்டு பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளை மீண்டும் ஒளிர செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
பட்டிப்பளை பிரதேசத்தை மட்டு நகருடன் இணைக்கும் பிரதான போக்குவரத்து மார்க்கமான மண்முனை பாலமானது மிக நீண்ட காலமாக இருளில் மூழ்கி காணப்படுவதன் காரணமாக இரவு நேரங்களில் இப் பாலத்தின் ஊடாக போக்குவரத்தின் போது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு, விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகிறது
மேலும் குறித்த இப் பாலத்துக்கு அடியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை அண்மையில் முதலை பிடித்துச் சென்ற சம்பவம் ஒன்றும் பதிவாகியிருந்தது
இந்நிலையில் இவ் விடையம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் பிரதேச சபை உறுப்பினர்கள், ஏனைய துறை சார் அதிகாரிகலுடன் இணைந்து பிரதேச சபை தவிசாளர் கள விஜயம் மேற்கொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது


