பலங்கொட கஸ்ஸப தேரரின் ரிட் மனு பரிசீலனைக்கு..!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலனைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டதோடு, பின்னர் விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி மனுவை அழைப்பதற்கும் உத்தரவிடப்பட்டது.

