திருமலையில். 08ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்..!

திருமலையில். 08ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்..!

திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எட்டாம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் குறித்த சிறுவர்களை அழைத்துச் சென்று கசிப்பு அருந்த கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோமரங்கடவல பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களை கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும்,

 

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin