திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – கட்டளை தொடர்பான அறிவிப்பு..!
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாண வம்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான கட்டளை இம்மாதம் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய இருவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னரே இந்த அறிவிப்பு வெளியானது.

