யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடொன்றை இறைச்சியாக்கி விற்பனை செய்த இருவர் 41 கி.கி மாட்டிறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாட்டை இறைச்சியாக்கி விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரையும் கைது செய்ததுடன், 41 கி.கி இறைச்சியையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் இறைச்சியாக்கப்பட்ட மாடு களவாடப்பட்டதா என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.