யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று (19) காலை வீசிய மினி புயல் காரணமாக சில கட்டடங்களின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்சந்திர மூர்த்தி ரஜீவன், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.