கச்சான் பருப்பு புரையேறி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

13 Jan 2025 ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று கச்சான் பருப்பு புரையேறியதால் உயிரிழந்துள்ளது.
இதன்போது சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு
உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குழந்தை நேற்று (11) கச்சான் சாப்பிட்டவேளை புரையேறியது.
பின்னர் குழந்தை உறங்கி விட்டது. உறங்கிய குழந்தை நேற்று இரவு எழுந்து வாந்தி எடுத்துவிட்டு அழுதவேளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் இன்று (11) குழந்தை உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சுவாசக் குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: admin