அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா யாழில் இன்று நடைபெற்றது.
மல்லாகத்திலிருந்து இன்று காலை ஆரம்பமான அன்னையின்; திருவுருவப்படம் தாங்கிய ஊர்த்திப் பவனி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலை சென்றடைந்தது.
ஆலய வழிபாட்டைத் தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றன.
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண அளுநர் நா. வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, தெல்லிப்பழை பிரதேச செயலர், இந்து மத குருமார்;, மக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.