யாழ். சர்வதேச விமான நிலையம் : பட்டம் விடத் தடை – பாதுகாப்பு எச்சரிக்கை!

யாழ். சர்வதேச விமான நிலையம் : பட்டம் விடத் தடை – பாதுகாப்பு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதற்கு (Kite Flying) விமான நிலைய அதிகாரசபை தடை விதித்துள்ளதுடன் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையையும் விடுத்துள்ளது

விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளின் போது பட்டங்கள் வான்பரப்பில் இருப்பது பாரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பட்டங்களின் நூல்கள் மற்றும் பட்டங்கள் விமான இயந்திரங்களுக்குள் (Engines) சிக்கினால் அல்லது விமானிகளின் பார்வையை மறைத்தால் பாரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

கடந்த வாரம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, பட்டத்தினால் சிரமத்தை எதிர்கொண்டது. மயிரிழையில் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பலாலி, காங்கேசன்துறை, மாவிட்டபுரம், வறுத்தலை விளான் மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளில் இந்தத் தடை கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன்

சுவரொட்டிகள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் மக்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin