எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டு..!

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டு..!

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளையில் ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளிச் சிலைகளே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.

களவாடப்பட்ட இவ்விரு சிலைகளின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறைப்பாடு தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் எழுவைதீவிற்கு நேரில் சென்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

Recommended For You

About the Author: admin