அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த சர்வதேச ஐஸ் ஹொக்கி தகுதிச்சுற்றுப் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் ஐஸ் ஹாக்கி சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக திட்டமிடப்பட்டிருந்த சர்வதேச ஐஸ் ஹொக்கி தகுதிச்சுற்றுப் போட்டிகளை இரத்துச் ரத்துசெய்துள்ளதாகவும் அவுஸ்திரேலியாவின் ஐஸ் ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
உள்ளூர் காவல்துறையிடம் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் மெல்பர்னில் நடைபெறவிருந்த போட்டியை ரத்துசெய்ய முடிவெடுத்துள்ளதாகவும் அவுஸ்திரேலியாவின் ஐஸ் ஹொக்கி சம்மேளனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.