ICC விருதுக்கு குசல், வனிந்து, ஷமரி பரிந்துரை
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2024ஆம் ஆண்டுக்கான ‘ஆண்டின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர்’ விருதுக்கு, இலங்கையின் வனிந்து ஹசரங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இவர்களைத் தவிர, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அஸ்மத்துல்லா ஒமர்சாய் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த ஷர்பான் ரதர்ஃபேர்ட் ஆகிய இருவரும், இந்த விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஐசிசி 2024ஆம் ஆண்டில் ‘ஆண்டின் சிறந்த ஒரு நாள் வீரர்’ மற்றும் ‘ஆண்டின் சிறந்த டி20 வீரர்’ ஆகிய இரண்டு விருதுகளுக்கும், ஷமரி அத்தபத்துவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.