2024ம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் 3,700 பேர் உயிரிழப்பு
ஒவ்வொரு ஆண்டும் காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. அந்த வகையில் காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு மட்டும் (2024) உலகளவில் 3,700 பேர் உயிரிழந்துள்ளதாக லண்டனை சேர்ந்த உலக வானிலை கண்காணிப்பகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், காலநிலை மாற்றத்தால் ஆண்டின் சராசரி வெப்ப நாட்களில் 41 நாட்கள் கூடுதலாகி உள்ளது.
மேலும் கடும் வெயில், வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம் மற்றும் புயல் காரணமாக உலகநாட்டு மக்கள் கடும் அவதியடைந்து உள்ளனர்.
சூடான், நைஜீரியா, கேமரூன் ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.