கடல் கொந்தளிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

கடல் கொந்தளிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

கொழும்பு: வளிமண்டலவியல் திணைக்களம், ஆழ்கடல் பகுதிகளில் பணிபுரியும் மீனவர்களுக்கு கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு, மத்திய மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக் கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும், பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக இலங்கையின் தென்கிழக்கு ஆழ்கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திணைக்களம், கடற்பரப்புகளை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: admin