ஷகிப் அல் ஹசனுக்கு தடை!
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) ஐசிசி-அங்கீகரிக்கப்பட்ட தேசிய கூட்டமைப்புகளால் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பந்து வீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவற்றில் உள்நாடு மற்றும் சர்வதேசப் போட்டிகளும் அடங்கும் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஞயாற்றுக்கிழமை (15) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
முன்னதாக சர்ச்சைக்குரிய பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து-வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) அதிகார வரம்பிற்கு உட்பட்ட போட்டிகளில் பந்துவீசுவதில் இருந்து தேசிய அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
இந்த நிலையில் ஷாகிப், அங்கீகாரம் பெற்ற சோதனை மையத்தில் மறுமதிப்பீட்டில் முன்னிலையாகி தனது பந்து வீச்சு பாணியை தெளிவுபடுத்தி இடைநீக்கத்தை நீக்குவதற்கு முயற்சிப்பார் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
பந்துவீச தடை விதிக்கப்பட்டாலும் ஷகிப், துடுப்பாட்ட வீரராக விளையாட முடியும்.
ஒருநாள் போட்டிகளில் அவர் இன்னும் சிறந்த நிலையில் உள்ளார்.
எனினும், கடந்த நான்கு வாரங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடர்களுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அவர் தற்போது லங்கா டி10 போட்டியில் பங்கேற்றுள்ளார்.