குள வான்பகுதியிலிருந்து அரச ஊழியரின் சடலம் மீட்பு!

குள வான்பகுதியிலிருந்து அரச ஊழியரின் சடலம் மீட்பு!

வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.

குறித்த இளைஞன் வனஜீவராசிகள் திணைக்களத்தால் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர்.

இந்த நிலையில் நேற்று மாலை குறித்த இளைஞன் சேமமடு குளத்தின் ஆற்றுப்பகுதிக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவரை காணாத நண்பர்கள் தேடியுள்ளனர்.

இந்த நிலையில், அவரது சடலம் இன்று காலை குறித்த ஆற்றுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

மகா றம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற அரச ஊழியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin