அதானியின் மன்னார் காற்றாலை மின் திட்டம் நிறுத்தம்

இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானியின் நிறுவனங்களால் ஆரம்பிக்கப்படவிருந்த மன்னார் காற்றாலை மின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க குறிப்பிட்டதாக இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன் குறித்த நிறுவனத்தை விட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மூன்று உள்ளூர் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மின் உற்பத்தி செலவைக் குறைக்க எரிபொருளின் பயன்பாட்டைக் குறைத்து, பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நாட வேண்டும் என்றும், இயற்கை ஆற்றல் உற்பத்திக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI