மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வேலையெல்லாம் சரியாக நடக்கும். புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். மழை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கலாம். இருந்தாலும் படிப்பில் ஆர்வம் குறைய கூடாது. நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. நிதி நிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தொந்தரவுகள் இருக்கும். உடல் பாதைகள் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். வேளையிலும் தொழிலிலும் முழு கவனம் செலுத்த முடியாது. நிதி நிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு காணப்படும். வீண் செலவு உண்டாகும். –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். நல்ல ஓய்வு இருக்கும். நிறைய பேருக்கு விடுமுறை நாளாக இருப்பதால் பெருசாக வேலை பிரஷர் இருக்காது. தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டாம். வெளியூர் பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு வேலைக்கு, நான்கு வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் அசதி ஏற்படும். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். டென்ஷனாக கூடாது. முன் கோபம் இருக்கக் கூடாது. குழந்தைகளோடு கொஞ்சம் அனுசரணையாக பேசுங்கள் நல்லது நடக்கும். –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன டென்சன்கள் இருக்கும். செய்ய வேண்டிய வேலையை சரியான நேரத்தில் செய்து கொடுக்க முடியாத காரணத்தால், திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மேல் அதிகாரிகளோடு வாக்குவாதம் உண்டாகும். வியாபாரத்தில் சின்ன சின்ன இடர்பாடுகள் ஏற்படும். சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. நிதி நிலைமை ஏற்ற இறக்கத்தோடு தான் காணப்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். நினைத்த வேலைகளை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள் நல்ல சாப்பாடு நல்ல ஓய்வு இருக்கும். சில பேருக்கு வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மழை காரணமாக பயணத்தில் கவனம் தேவை.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடங்கல்கள் ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் முதலீடு செய்ய வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். சில பல இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளிவருவீர்கள். நிதிநிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு காணப்படும் மழை காரணமாக சில பேருக்கு பிரச்சினைகள் இருக்கலாம். கூடிய விரைவில் அந்த பிரச்சனைகள் சரியாகிவிடும். இறைவனின் மீது நம்பிக்கை வையுங்கள். நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். கடந்த நாட்களாக சந்தித்து வந்த இன்னல்களை எல்லாம் சரி செய்து கொள்வீர்கள். மனதை நீங்களே பலப்படுத்திக் கொள்வீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற தேவையான முயற்சிகளை முழுமூச்சோடு செயல்பாட்டில் காண்பிப்பீர்கள். நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். பொருள் இழப்பு பண இழப்பு சரியாகும். தொலைந்த பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மன நிறைவாக இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வரவு நிறைந்த நாளாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருக்கவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி இருக்கும். உறவினர்களோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்யக்கூடிய வாய்ப்புகள் அமையும். சுப செலவுகள் உண்டாகும். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அலட்சியம் வேண்டாம். தெரியாத மனிதர்களோடு பழகுவதை குறைத்துக் கொள்வது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் சில பேருக்கு கிடைக்கும். வேலையில் சின்ன சின்ன டென்ஷன் இருக்கும். மழை காரணமாக சில பேரால் வேலையை சரியாக செய்ய முடியாது. இருப்பினும் வேலையில் பிரஷர், மேலதிகாரிகளுடன் பிரஷர் வாக்குவாதம் சண்டை வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். பொறுமையாக இருங்கள் அவசரப்பட வேண்டாம்.