பாதிப்படைந்த மக்களின் வாழ்வை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டும். -சரோஜா சாவித்திரி போல் ராஜ்.

அரசாங்கம் என்ற வகையில் சீரற்ற கால நிலையினால் பாதிப்டைந்துள்ள மக்களின் வாழ்வை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ். தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(01.12) ஞாயிறு, மன்னாருக்கு வருகை தந்து, சீரற்ற காலநிலையால்,  பாதிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்கி வாழும் மக்களைச் சந்தித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசு பொறுப்பேற்றதிலிருந்து, மக்களுக்கு நிறைய அபிவிருத்தி வேலைகளை செய்ய வேண்டும் என்ற அபிலாசையில் இருந்து வருகின்றது.

தற்பொழுதுள்ள காலநிலை மாற்றம் காரணமாக எமது மக்கள் வெள்ளத்தினால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

பாதிப்டைந்துள்ள மக்களின் வாழ்வை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.  அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் இதற்கு துணைபுரிய வேண்டிய அவசியம் உண்டு.

பாதிப்டைந்துள்ள மீளக்குடியேற பிரதேச செயலகங்கள் மாவட்ட செயலகம் மற்றும் அணைத்து அமைச்சுக்களும் யாவரும் ஒன்றிணைந்து செயல்பட இருக்கின்றோம்.

பாதைகள் உங்கள் இல்லங்கள் மற்றும் உங்கள் அன்றாட உணவு விடயங்கள் சுகாதார தேவைகள் போன்றவற்றில் இந்த அரசு கவனம் செலுத்தி தீவிரமாக செயற்படுத்தி வருகின்றது.

அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக சுகாதார தேவைகள் உணவுப் பொதிகள் வழங்கப்படுவதோடு, ஏனைய நிவாரணங்களும் வழங்கப்படுகின்றன. இதற்கு துணையாக ஜெயிக்கா நிறுவனம் ,  சாக் நிறுவனம், மற்றும் யுஎன்டிபி நிறுவனங்கள் உதவி புரிகின்றன.

இதை வழங்குவதற்காகவே நாங்கள் மன்னாருக்கு வருகை தந்துள்ளோம் எனத்தெரிவித்தார்..

குறித்த நிகழ்வில்,

மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்திய கலாநிதி நாமல் லக்ஸமன , பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க அமைச்சின் செயலாளர்கள் கலந்து கொண்டு சுகாதாரப் பொதிகளை வழங்கிவைத்தனர்.மற்றும் இந்நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், மேலதிக மாவட்டச் செயலாளர் ஶ்ரீஸ்கந்தகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு முகாம்களைப் பார்வையிட்டனர்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI