காலநிலை தொடர்ந்தால் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.. அரச அதிபர் முரளிதரன்.
நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 4ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 787 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நாட்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையான தகவலின் அடிப்படையில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மழையுடனான காலநிலை தொடர்ந்தால் மேலும் பாதிப்புகள் அதிகரிக்கலாம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பாதிப்பு விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 12,787 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 379 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1100 பேர் பாதுகாப்பான முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது சுமார் 2 ஆயிரத்து 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி யுள்ளனர்.
இரணைமடுக் குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அனர்த்தம் தொடர்பான முன்எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் சம்பநதப்பட்ட தரப்பினர்கள் ஊடாக
அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஆகவே மழையுடனான காலநிலை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் பாதிப்புகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.