வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள சட்டவிரோத கட்டுமானங்களை இடித்து அகற்றுமாறு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட விரோத கட்டுமானங்கள் இரவோடு இரவாக கட்டுப்பட்டவை அல்ல.
மாவட்டத்தில் ஒரு அரசாங்க அதிபர் பிரதேசத்தில் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைச் செயலாளர் மற்றும் கிராமத்தில் கிராம சேவையாளர் உள்ளிட்டவர்கள் இருக்கும்போதே கட்டுமானங்கள் இடம்பெற்றிருக்கும்.
சட்டவிரோத கட்டுமானங்கள் இடம்பெறும் போது பலர் முறைப் பாடுகளை தெரிவித்தும் அரச அதிகாரிகளால் அதனை தடுக்க முடியவில்லை.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பல அனத்த முகமை துவ கூட்டங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் நீரோடும் பகுதிகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் அதிகாரிகளால் நடவடிக்கை இன்றி கடந்து செல்லப்பட்டது.
தற்போதைய வட மாகாண ஆளுநர் முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெள்ள வாய்க்கால் மற்றும் கடற்கரை ஓரங்களில் சட்டவிரோத கட்டடங்கள் அமைக்கப்பட்ட போது அதனை தடுக்காது விளக்கக் கடிதம் அனுப்பி வேடிக்கை பார்த்தவர்கள் அரச அதிகாரிகள் தான்.
ஆளுநர் கூறுவது போன்று கட்டடங்களை இடியுங்கள் என்றவுடன் பிரதேச சபை செயலாளர்கள் இடிப்பார்களா என்பது தான் கேள்வி?
நான் அறிந்த வகையில் ஒரு சட்ட விரோத கட்டடம் அமைக்கப்படும் போது அதனை தடுக்க வேண்டும் இல்லையேல் அதனை இடிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.
பிரதேச சபை சட்டங்களில் சட்ட விரோத கட்டுமானங்களை இடிப்பதற்கான அதிகாரங்கள் இருந்தால் அதனை செயலாளர்கள் எவ்வளவு தூரம் ஆளுமையாக செயல்படுத்துவார்கள் என்பது கேள்வி.
ஆனால் ஆளுநர் இடியுங்கள் என்கிறார் பார்ப்போம் என்ன நடக்குது என்று.
இடித்தார்களாயின் ஆளுமையுள்ள நிர்வாகம் செயற்படுகின்றது என்பது தெளிவாகும் இல்லையேல் பத்திரிகை மற்றும் இலத்திரன்கள் ஊடகங்களுக்கு ஆளுநர் செயலக செய்தியாக மட்டும் அமைந்து விடும்