பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான யாழ். தீவகம் வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான வடக்கு மாகாண சபையின் முன்னாள் யாழ்.மாவட்ட உறுப்பினரும், அறக்கட்டளையின் செயலாளருமான என்.விந்தன் கனகரட்ணம், இணைப்பாளர் ரி.ஜோசேப், ஆலோசகர் இ.மயில்வாகனம், யாழ்.கிளைத் தலைவர் தனேந்திரன் ஆகியோருடன் வலிகாமம் தெற்கு பிரதேச சபை சுன்னாகம் பதினான்காம் வட்டார உறுப்பினரான திருச்செல்வம் அன்ரன் லீனஸ் அவர்களும் இணைந்து யாழ். உடுவில் ஜே 182 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வறிய நிலை குடும்பத்தில் உள்ள மாற்றுத் திறனாளியான பதின்மூன்று வயது பெண் பிள்ளை ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.