ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022)
இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு, இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது.
கனடா, ரொன்ரோவை வதிவிடமாகக்கொண்ட
சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக் குருக்கள் அவர்களின் அனுசரணையுடன்,
சமயஜோதி திரு.கதிர்காமன் நிஜலிங்கம் அவகளின் ஒழுங்கமைப்பில்,
32 அறநெறிப் பாடசாலைகளில் நவராத்திரி விழா. 26.09.2022 திங்கட்கிழமை தொடக்கம்
05.10.2022 புதன்கிழமை வரை மாலை 3.30 மணிக்கு இந்து சமய, கலாசார உத்தியோகத்தர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது. 26.09.2022 திங்கட்கிழமை ஊர்காவற்றுறை தம்பாட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் “துர்க்கை வழிபாட்டின் மகிமை ” என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் பொன்.சந்திரவேல் அவர்களின் சொற்பொழிவும்
27.09.2022 செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை புளியங்கூடல் தங்கம்மா மடாலய பண்ணிசை அறநெறிப் பாடசாலையில் ” வல்லமை தாராயோ ” என்னும் விடயப்பொருளில் பொன்.சந்திரவேல் அவர்களின் சொற்பொழிவும் , கோப்பாய், ஊரெழு சிவபூரணி முத்தமிழ் மன்ற அறநெறிப் பாடசாலையில் ” நவராத்திரியும் வாழ்வியலும் ” என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் கந்த சத்தியதாசன் அவர்களின் சொற்பொழிவும் , ஏழாலை கருணாகரப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலையில் ” சக்தி வழிபாடும் சைவமும் ” என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் ச.முந்தன் அவர்களின் சொற்பொழிவும் , புங்குடுதீவு, பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் ” கல்வித் தெய்வ வழிபாடும் பயனும் ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் நித்தியபாபுதரன் அவர்களின் சொற்பொழிவும்
28.09.2022 புதன்கிழமை ஊர்காவற்றுறை கரம்பொன் கிழக்கு வட்டுவில் முருகமூர்த்தி அறநெறிப் பாடசாலையில் ” பகை விலக்கும் பராசக்தி ” என்னும் விடயப்பொருளில் பொன்.சந்திரவேல் அவர்களின் சொற்பொழிவும் , சங்கானை சுழிபுரம் பாரதி கலைமன்ற அறநெறிப் பாடசாலையில் “அம்பிகையின் அருளாளர்கள் ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் க.கைலநாதன் அவர்களின் சொற்பொழிவும்
29.09.2022 வியாழக்கிழமை உடுவில் இலக்ஷ்சுமி அறநெறிப் பாடசாலையில் ” நவராத்திரியும் வாழ்வியலும் ” என்னும் விடயப்பொருளில் சிவநெறிச்செம்மல் க.ஈஸ்வரன் அவர்களின் சொற்பொழிவும் 30.09.2022 வெள்ளிக்கிழமை பருத்தித்துறை புற்றளை சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையில் ” நவராத்திரி விரதமும் வாழ்வியலும் ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் ச.நவநீதன் அவர்களின் சொற்பொழிவும் , கோப்பாய் உரும்பிராய் பராசக்தி அம்மன் அறநெறிப்பாடசாலையில் ” கல்வித் தெய்வ வழிபாடும் பயனும் ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் க.கைலவாசன் அவர்களின் சொற்பொழிவும் , தெல்லிப்பளை இளவாலை பாரதி அறநெறிப் பாடசாலையில் ” அன்பு நெறியும் அன்னை வழிபாடும் ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் நித்தியபாபுதரன் அவர்களின் சொற்பொழிவும் ,
தெல்லிப்பளை கொல்லங்கலட்டி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையில் ” கும்பபூஜை மகிமை ” என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் செ.த.குமரன் அவர்களின் சொற்பொழிவும் , இணுவில் சிவகாமி அம்மன் அறநெறிப்பாடசாலையில் ” கும்பபூஜை மகிமை ” என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் ச.முகுந்தன் அவர்களின் சொற்பொழிவும் ,
யாழ் அத்தியடி சிதம்பரநடராஜ வீரகத்திப்பிள்ளையார் அறநெறிப் பாடசாலையில் ” கல்வித் தெய்வ வழிபாடும் பயனும் ” என்னும் விடயப்பொருளில் சிவநெறிச்செம்மல் க.ஈஸ்வரன் அவர்களின் சொற்பொழிவும் , சரவணை கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலையில் ” வல்லமை தாராயோ ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் த.மனோஜ்குமார் அவர்களின் சொற்பொழிவும் , கைதடி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் அறநெறிப் பாடசாலையில் ” கல்வித் தெய்வ வழிபாடும் பயனும் ” என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் சி.கா.கமலநாதன் அவர்களின் சொற்பொழிவும் ,
இணுவில் அம்பலவாண சுவாமிகள் அறநெறிப்பாடசாலையில் ” சக்தி வழிபாடும் சைவமும் ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் க.கைலநாதன் அவர்களின் சொற்பொழிவும் 01.10.2022 சனிக்கிழமை சண்டிலிப்பாய் மாதகல் சகாயபுரம் கருணை வைரவர் அறநெறிப் பாடசாலையில் ” சக்தி வழிபாடும் சைவமும் ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் ச.நவநீதன் அவர்களின் சொற்பொழிவும் , சங்கானை அராலி ஐயனார் அறநெறிப் பாடசாலையில் ” நவசக்தி வழிபாட்டின் மகிமை ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் த.மனோஜ்குமார் அவர்களின் சொற்பொழிவும் , சாவகச்சேரி கல்வயல் ஆலடிப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலையில் ” அம்பிகையின் அருளாளர்கள் ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் க.கைலவாசன் அவர்களின் சொற்பொழிவும்
02.10.2022 ஞாயிற்றுக்கிழமை பருத்திதுறை வராத்துப்பளை ஞான வைரவர் அறநெறிப் பாடசாலையில் ” அம்பிகையின் அருளாளர்கள் ” என்னும் விடயப்பொருளில் சைவப்ப்லவர் செ.த.குமரன் அவர்களின் சொற்பொழிவும் , சண்டிலிப்பாய் நவாலி ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் அறநெறிப் பாடசாலையில் ” அன்பு நெறியும் அன்னை வழிபாடும் ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் நித்தியபாபுதரன் அவர்களின் சொற்பொழிவும் , சங்கானை தொல்புரம் ஆதி முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் ” அம்பிகையின் அருளாளர்கள் ” என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் செ.கந்த.சத்தியதாசன் அவர்களின் சொற்பொழிவும் , யாழ் ஸ்ரீ வதிரிபீட விநாயகர் அறநெறிப் பாடசாலையில் ” கும்பபூஜை மகிமை ” என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் கா.கமலநாதன் அவர்களின் சொற்பொழிவும் ,யாழ் கண்ணாபுரம் ஞான வைரவர் அறநெறிப் பாடசாலையில் ” க.ஈஸ்வரன் அவர்களின் சொற்பொழிவும் , கரவெட்டி கலாசார மத்திய நிலையத்தில் ” சக்தி வழிபாடும் சைவமும் ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் ச.நவநீதன் அவர்களின் சொற்பொழிவும் , வேலணை சர்வசக்தி அறநெறிப் பாடசாலையில் ” நவாராத்திரி உணர்த்தும் வாழ்வியல் ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் த.மனோஜ்குமார் அவர்களின் சொற்பொழிவும் ,
திருநெல்வேலி ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் ” வல்லமை தாராயோ ” என்னும் விடயப்பொருளில் சி.கா.கமலநாதன் அவர்களின் சொற்பொழிவும் 03.10.2022 திங்கட்கிழமை கோப்பாய் சிறுப்பிட்டி அண்ணமார் அறநெறிப் பாடசாலையில் ” வல்லமை தாராயோ ” என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் ச.முகுந்தன் அவர்களின் சொற்பொழிவும் , கரவெட்டி கிழக்கு இலம்போதரன் அறநெறிப் பாடசாலையில் ” அன்பு நெறியும் அன்னை வழிபாடும் ” என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் செ.த.குமரன் அவர்களின் சொற்பொழிவும் 05.10.2022 புதன்கிழமை சண்டிலிப்பாய் பண்த்தரிப்பு சாந்தை விநாயகர் அறநெறிப் பாடசாலையில் ” அன்னையின் திருவருள் ” என்னும் விடயப்பொருளில் இளம்சைவப்புலவர் க.கைலநாதன் அவர்களின் சொற்பொழிவும் , சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படும்.
குறிப்பு – நவராத்திரி பூஜை வழிபாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நவராத்திரி தோத்திரப் பாமாலை நூல் இலவசமாக வழங்கப்படும்.