களுத்துறை, அளுத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து கையடக்கத் தொலைபேசிகளை திருடியதாகக் கூறப்படும் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டு சம்பவம் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை, தர்கா நகரத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுவனே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.