கறுவா ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கறுவா ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கறுவா ஏற்றுமதி மூலம் 35,778 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் 11,347 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin