மேஷம்
இன்று அதீத உற்சாகத்தில் எந்த வேலையும் செய்யாதீர்கள், இல்லையெனில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். உங்கள் வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் நாளாக இருக்கும். அரசு வேலைகளுக்கு தயாராகும் நபர்கள் இன்று நல்ல செய்திகளைப் பெறலாம். முக்கிய பணிகளை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 5. அதிர்ஷ்ட நிறம்: பச்சை
ரிஷபம்
உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் கடினமாக உழைப்பீர்கள், இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்று உங்கள் வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நாளாக இருக்கலாம். இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பதால் உங்களுக்கு நிதிப் பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 1. அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
மிதுனம்
இன்று நீங்கள் மனதளவில் வலுவாக இருக்க வேண்டும், உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். நீங்கள் விரும்பும் பொழுதுபோக்கில் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சில வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கலாம். இன்று பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பணப் பற்றாக்குறையை தவிர்க்க உங்கள் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியிருக்கலாம். அதிர்ஷ்ட எண்: 10. அதிர்ஷ்ட நிறம்: பிங்க்
கடகம்
இன்றைய நாள் உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். நீங்கள் செய்து முடிக்க நினைக்கும் வேலையிலும் பல தடைகளை சந்திக்க நேரிடும். எனவே, நீங்கள் பொறுமையாக வேண்டும். உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்களிடமிருந்து பரிசு பொருட்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 6. அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
சிம்மம்
முடிந்தவரை இன்று நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். மாணவர்கள் இன்று படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் புதுமையான ஆளுமையை வெளிப்படுத்த வாய்ப்பு அமையும். அதிர்ஷ்ட எண்: 11. அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கன்னி
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்க கூடியது. எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். இன்று யாரையும் அதிகமாக நம்பக்கூடாது. இன்று நீங்கள் எல்லாவற்றிற்கும் எதிர்வினை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நிதானமாக இருந்தால் சண்டைகளையும் தவிர்க்கலாம். இன்று உங்களுக்கு பணவரவு சீராக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 2. அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
துலாம்
இன்று முக்கிய பணிகளை முடிக்க உங்கள் நண்பர்களின் ஆதரவை பெறலாம். வணிகர்கள் தங்கள் துறையில் புதிதாக ஏதாவது செய்ய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளை சார்ந்தே இன்று உங்களால் வெற்றி பெற முடியும். வரன் தேடுபவர்களுக்கு திருமணம் கைகூடும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். அதிர்ஷ்ட எண்: 9. அதிர்ஷ்ட நிறம்: பர்பிள்
விருச்சிகம்
இன்று உங்கள் அறிவை அதிகரிக்க முயற்சிப்பீர்கள். அதோடு மற்றவர்களுக்கு வழிகாட்டுவதிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கினால் மட்டுமே பொருளாதார நெருக்கடியை உங்களால் சமாளிக்க முடியும். சமூகசேவைகளில் ஈடுபடுவது உங்கள் மீது உள்ள மதிப்பை அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 12. அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
தனுசு
இன்று உங்களுக்கு சற்று சவாலான நாளாக இருக்கும். உங்கள் துணையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியம் சம்பந்தமாக உங்களுக்கு இன்று எந்த பெரிய பிரச்சனையும் இருக்காது. வணிகர்கள் இன்று தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொண்டால் பெரிய லாபம் ஈட்டலாம். அதிர்ஷ்ட எண்: 8. அதிர்ஷ்ட நிறம்: நேவி ப்ளூ
மகரம்
இன்று உங்கள் உறவுகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம். சிக்கல்களை தவிர்க்க புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். பணவரவு இருக்கும் என்பதால் நீங்கள் விரும்பியபடி செலவு செய்யலாம். இதன் மூலம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 7. அதிர்ஷ்ட நிறம்: மெஜந்தா
கும்பம்
இன்றைய நாள் மிகவும் கடினமான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் சவால்களை சமாளிக்க விவேகத்துடன் செயல்பட வேண்டும். இன்று உங்கள் ஆளுமையை நிலையானதாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சற்று சவாலாக இருக்கும். எனவே செலவுகளில் கவனம் செலுத்தி சேமிக்க முன்னுரிமை கொடுங்கள். அதிர்ஷ்ட எண்: 15. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று தங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இருந்த போதிலும் உங்கள் விடாமுயற்சி மற்றும் பொறுமை மூலம் அவற்றை தீர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். வணிகர்கள் தங்கள் தொழிலில் வெற்றியை அடைய நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும், புதிய திட்டங்களை ஏற்று கொள்ள தயாராக இருக்க வேண்டும். இன்று எந்த விஷயத்தையும் அவசரமாக செய்ய வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 3. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை