உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வர வேண்டும் என பொதுமக்களும், தொண்டர்களும் விரும்புவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, உதயநிதி அரசியலுக்கு வந்த பின்பு திமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருவதாக கூறியிருக்கிறார்.
திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிகப்படியான செல்வாக்கு உள்ள தலைவராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். திமுக இளைஞரணி பொதுச்செயலாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் இருக்கிறார்.
கட்சியில் மட்டுமல்ல ஆட்சியிலுமே முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் மட்டுமல்ல, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.
இது கிட்டத்தட்ட முதல்வரை போல் எல்லா துறைகளிலும் சம்பந்தப்பட்ட முக்கியமான துறையாகும். அதே நேரம் இதுவரை துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படவில்லை.
ஸ்டாலின் கையில் ரிப்போர்ட் கார்டு! உளவுத்துறை அளித்த பேப்பர்! காரை எடுத்த அமைச்சர்கள்! ஆட்டம் மாறுது ஸ்டாலின் கையில் ரிப்போர்ட் கார்டு! உளவுத்துறை அளித்த பேப்பர்! காரை எடுத்த அமைச்சர்கள்! ஆட்டம் மாறுது
முன்னதாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அதாவது ஆறு மாதம் முன்பே துணை முதல்வராக ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என்று திமுகவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆறு மாதம் முன்பு சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டில் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களது கட்அவுட்டுகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியினர் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக பெரிய தலைவராக உதயநிதியை புகழ்ந்தார்கள்.
இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின், இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள துணிவுமிக்க தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். இப்படிப்பட்டவருக்கு துணை முதல்வர் பதவி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக ஆதங்கங்களை அப்போது வெளிப்படுத்தினார்கள்.
ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படும் முற்றிலும் வதந்தி என்று சேலம் மாநாட்டிற்கு முன்பே முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 இடங்களில் திமுக வென்றது. தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக வென்றுள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள திமுகவினர், உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.
இன்று மாற்றி அமைக்கப்படும் தமிழக அமைச்சரவை? துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்?இன்று மாற்றி அமைக்கப்படும் தமிழக அமைச்சரவை? துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்?
அந்த வகையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வர வேண்டும் என பொதுமக்களும், தொண்டர்களும் விரும்புவதாக தெரிவித்தார்.
மதுரையிலுள்ள ஆவின் நிறுவனத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மனோ தங்கராஜ் பேசுகையில், “மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்திய நாட்டின் கருத்துச் சுதந்திரம் 161வது இடத்திற்கு உலகளவில் சென்றுள்ளது.
இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்றும், இதனை தொண்டர்களும் மக்களும் விரும்புகிறார்கள், ஆகையால் அவர் எப்போது துணை முதல்வரானாலும் அது மகிழ்ச்சியான விஷயம்” என்றார்.
இதனிடையே விக்கிரவாண்டி தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான நேர்மையான மூன்று ஆண்டு ஆட்சிக்கு கிடைத்த வெற்றி . உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்த பின்பு திமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது என்று கூறினார்.
இப்படி அடுத்தடுத்து தலைவர்கள் உதயநிதியை புகழ்ந்து வரும் நிலையில், உதயநிதி துணை முதல்வராக அறிவக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக திமுகவினர் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்கா செல்ல உள்ளார், வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ள மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் நிறைவடந்ததுமே, ஸ்டாலின் வெளிநாடு புறப்படலாம் என்கிறார்கள்.
அப்படி அமெரிக்கா செல்லும் போது சில வாரங்கள் ஆட்சி மற்றும் கட்சியில் அமைச்சர் உதயநிதி அதிகார மையமாக செயல்பட வாய்ப்பு உள்ளதும் என்றும் கூறுகிறார்கள்.