நிமல் லான்சாவின் தலைமையிலான மொட்டுக் கட்சி குழு மற்றும் ரணில் விக்கிரமசிங்க இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பசில் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்துடன் ரணில் மேற்கொண்டு வரும் அரசியல் உறவு தொடர்பில் நிமல் லான்சா உள்ளிட்டவர்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.
எனினும், இதுவரையில் அந்த அனைத்து குழுக்களையும் தன்னைச் சுற்றி தக்க வைத்துக்கொள்ளும் அளவிற்கு அவர் திறமைசாலியாக காணப்படுகிறார்.
இந்நிலையில், கடந்த 06ஆம் திகதி நடைபெற்ற ரோஹித அபேகுணவர்தனவின் பேரணியில் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டமைக்கும் நிமல் லான்சா அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ராஜபக்ச குடும்பத்தின் முன்னணி குழுவுடன் ரணில் விக்கிரமசிங்கவின் வலுவான பிணைப்பு, லான்சா அணியை மிஞ்சும் நிலையை எட்டியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தன்னுடைய இருப்பு குறித்து நிச்சயமற்ற நிலை காணப்படுவதால் இந்த அணி அடுத்து என்ன செய்யப்போகிறது என்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரியவருகிறது.