முல்லைத்தீவில் கண் திறந்து அருள்பாலித்த அம்மன்

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலையின் ஒரு கண் திறந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் ஆலயத்திலுள்ள அம்மன் சிலையானது வழமையாக மூடிய நிலையிலுள்ள கண்களையுடைய சிலையாகவே காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென சிலையிலுள்ள ஒரு கண் திறந்த நிலையிலும் மற்றைய கண் மூடிய நிலையிலும் மாறி மனித கண்களை ஒத்த நிலையில் தென்பட்டு காணப்படுகின்றது.

இதனை பிரதேசவாசிகள் ஆச்சரியத்துடனும், பக்தி பரவசத்துடனும் வணங்கி வருகின்றனர்.

76

8768

8686

Recommended For You

About the Author: admin