இந்தியா – உத்தரபிரதேச மாநிலமான மண்டோலாவில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் நேற்று (11) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முதல்வர் இல்லத்தை சூழவுள்ள பகுதிகள் உட்பட டெல்லியில் பல பிரதேசங்களில் மின் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அரச பொறியியலாளர்களை பணியில் ஈடுபடுத்தி நிலைமையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி – மண்டோலா துணை மின் நிலையத்தில் இருந்து 1200 மெகாவோட் மின்சாரம் பெறப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து டெல்லி மின்சாரத்துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மத்திய மின்துறை அமைச்சர் மற்றும் பவர் கிரிட் கோப்பரேஷன் தலைவரை ஆகியோரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தடையின்றி மின்சார சேவையினை வழங்கிவதற்கு முயற்சிப்பதாக டெல்லி அரசாங்கம் அறிவித்துள்ளது.