இந்திய தேர்தல்: கேள்விக்குறியான பெண் பிரதிநிதித்துவம்

மக்களவைத் தேர்தல் முடிகளை இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், வேட்பாளர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 8,337 வேட்பாளர்களில் வெறும் 9.6 வீதமானவர்கள் மாத்திரமே பெண்கள் என தெரியவருகிறது.

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை நோக்கமாகக் கொண்ட மகளீர் இடஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து இடம்பெறும் இடம்பெறும் முதலாவது தேர்தல் இதுவாகும்.

குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போதிலும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறானதொரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இந்த ஆண்டுத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் மிகக்குறைந்த அதிகரிப்பே ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

8,337 வேட்பாளர்களில் 797 பேர் மட்டுமே பெண்கள் என தேர்தல் உரிமைகளுக்கான ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏழு கட்டத் தேர்தல்களும் இந்த பாலின வேறுபாட்டைத் தொடர்ந்து பிரதிபலிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை 1957 ஆம் ஆண்டு 3 வீதமாக இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin