சிறையில் இருந்தவாறே ட்ரம்ப் ஜனாதிபதித் தேர்தலில்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அரசியல் வரலாற்றில் நீதிமன்றத்தினால் முதல் முறையாகத் தண்டிக்கப்பட்ட ஒரு முன்னாள் ஜனாதிபதி என்று லன்டன் பிபிசி செய்தியாளர் மார்க் ஷியா கூறுகிறார்.

ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றங்களுக்கும் தண்டனைகள் வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள்அ மிகவும் குறைவு என்று இச் செய்தியாளர் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காண்பித்துள்ளார்.

அமெரிக்காவின் எழுதப்பட்ட நெகழாத அரசியல் யாப்பின் பிரகாரம் நிறைவேற்று ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் சிறையில் இருந்தாலும் அல்லது சிறைத் தண்டனை அனுபவித்த ஒருவராக இருந்தாலும் போட்டியிட முடியும் என்று அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியர் இவான் மோர்கன் கூறியிருக்கிறார்.

தேர்தல் முறைமை

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒருவர் அமெரிக்காவில் 14 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும். அமெரிக்கப் பிரஜையாகாவும் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள பேராசியரியர் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்கப் பிரஜைதான என்ற வாதங்கள் தற்போது எழுந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக எந்த ஒருவிதியையும் பயன்படுத்த முடியாது என்றும் அமெரிக்க உயர் நீதிமன்றம் ட்ரம் தேர்தலில் போட்டியிட முடியாது என்று எதனையும் கூறவில்லை எனவும் பேராசிரியர் இவான் மோர்கன் கூறியிருக்கிறார்.

அமெரிக்கப் புரட்சியின் பின்னர் 1787 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியல் யாப்பை உருவாக்கிய புரட்சியாளர்கள் எவரும் பிரித்தானியரால் சிறையில்p அடைக்கப்படவில்லை. தமது நாட்டின் இறைமைக்கு எதிராகக் குற்றம் புரிந்தவர்கள் என்று தெரிந்pதும் அன்று பிரித்தானிய ஆட்சியாளர்கள் அவர்களைச் சிறையில் அடைக்க விரும்பிவ்லை.

கட்டுப்பாடுகள் இல்லை

இதன் காரணமாகவே எவரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய முறையில் அரசியல் யாப்பை உருவாக்கியவர்கள் கட்டுப்பாடுகள் எதனையும் விதிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

சிறையில் இருந்தவாறே அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்களில், 1920இல் போட்டியிட்ட யூஜின் டெப்ஸ் மிக முக்கியமான வேட்பாளர் என்றும் பேராசிரியர் மோர்கன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் ரயில் நிலையச் செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியதால் டெப்ஸ் என்ற தொழிற் சங்கவாதி முதன் முதலில் 1894 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனாலும் டெப்ஸ் பலதடவைகள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பத்து இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் டெப்ஸ் வெற்றியீட்டியிருந்ததாக பேராசிரியர் மோர்கன் பிபிசியிடம் மேலும் கூறியிருந்தார்.

Recommended For You

About the Author: admin