சீரற்ற காலநிலையால் 84,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு: உயிரிழப்பு 16 ஆக பதிவு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் 21,353 குடும்பங்களைச் சேர்ந்த 84,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலைமை காரணமாக ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதலாம் திகதி முதல் இரத்தினபுரி மாவட்டத்தில் 5 உயிரிழப்புகள் , கொழும்பு மாவட்டத்தில் 3 உயிரிழப்புகள், மாத்தறை மாவட்டத்தில் 6 உயிரிழப்புகள் மற்றும் காலி மாவட்டத்தில் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதன்படி, எட்டு மாவட்டங்களுக்குள் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 77 பேர் 77 பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மொத்தம் ஆறு வீடுகள் முழுமையாகவும், 1,214 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

Recommended For You

About the Author: admin