இர்ஃபான் நடத்திய Gender Reveal பார்ட்டி: அதிரடியாய் நடவடிக்கை எடுத்த தமிழக மருத்துவத்துறை

பிரபல யூடியுப்பர் இர்ஃபான் தனது வீடியோக்களால் பிரபலமானவர். இந்தியாவில் மிகவும் பிரபல்யமான நபர்களில் இவரும் ஒருவர்.

Irfan’s View என்கிற யூடியூப் சேனல் தான் அவரின் அடையாளம். இந்த யூடியூப் சேனல் தமிழ்நாட்டு உணவுப் பிரியர்கள் மட்டுமின்றி பலருக்கும் பரிட்சயம்.

இவருக்கு அண்மையில் திருமணம் முடிந்த நிலையில் மனைவி கர்ப்பமாக இருந்தார். ஆனால் கருவில் இருக்கும் குழந்தை எந்த பாலினம் என அறிய குறித்த தம்பதியினர் டுபாய் வரை சென்று அதை கண்டறிந்துள்ளனர்.

தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தமையானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது தமிழக மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் குழந்தை பிறக்கும் முன்னரே பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும்.

ஆனால், இவர்கள் பெரும் பணம் செலவு செய்து இவ்வாறான விடயங்களை செய்துள்ளமையானது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.

மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் தமிழக சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

மேலும், குறித்த காணொளியின் கீழ் அனைவரும் வாழ்த்து தெரிவித்த போதிலும் பலர் பல விமர்சனங்களை முன்வைத்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

தகத

இது அவரின் தனிப்பட்ட விடயம் இதில் யாரும் தலையிட கூடாது என பலர் கருத்து வெளியிட்ட வண்ணமும் உள்ளனர்.

என்னதான் ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயமே ஆனாலும், அது அவருடன் இருக்கும் வரை மாத்திரமே.. சமூக வலைத்தளத்துக்குள் வந்த பிறகு எப்படி அது தனிப்பட்ட விடயமாகும்?

Recommended For You

About the Author: admin