விக்கி லீக்ஸின் ஸ்தாபகர் தொடர்பில் லண்டன் உயர் நீதிமன்றின் அதிரடி உத்தரவு

அமெரிக்காவுக்கு, விக்கி லீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ்ஜை நாடு கடத்துவது தொடர்பான வழக்கை மேல்முறையீடு செய்ய லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசேஞ்ஜ் தனது ‘விக்கி லீக்ஸ்’ இணையதளத்தின் மூலம் பல்வேறு நாடுகளின் போர் குற்றம் மற்றும் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதன் பின்னணியிலேயே அமெரிக்க வெளியுறவு தொடர்பான இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை வெளியிட்ட வழக்கு லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

ஜூலியன் அசேஞ்ஜை நாடு கடத்துவது குறித்த வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் அசேஞ்ஜ் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மனுவை லண்டன் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin