ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் மற்றும் ஒரு சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இதன்படி, ஐபிஎல் வரலாற்றில் 10 வெவ்வேறு ஆண்டுகளாக ஒவ்வொரு பருவகாலத்திலும் 400 ஓட்டங்கள் அல்லது அதற்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேறறு இடம்பெற்ற போட்டியின் போது அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இதன்மூலம் சுரேஷ் ரெய்னா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
குறித்த இருவரும் ஒன்பது முறை 400 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடருடன் 2023, 2021, 2020, 2019, 2018, 2016, 2015, 2013 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் விராட் கோலி இந்த மைல்கல்லை எட்டினார்.
2016 ஆம் ஆண்டு நான்கு சதங்கள் மற்றும் ஏழு அரைசதங்கள் உட்பட 81.08 சராசரியில் 973 ஓட்டங்களை குவித்து ஒரு பருவத்தில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதுவரை 246 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 7,693 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், எட்டுச் சதங்கள் மற்றும் 53 அரைசதங்களை அடித்துள்ளார்.