மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் பலி!

மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் பலி!

மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ (Guanajuato) மாநிலத்தில் உள்ள சாலமன்கா (Salamanca) பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 10 பேர் கொல்லப்பட்டுள்ளனா். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை மொத்தம் 11 பேர் என தொிவிக்கப்படுகின்றது.

ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெண் உட்பட 12 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விளையாட்டுப் போட்டி முடிந்து மக்கள் கலைந்து செல்லத் தயாராக இருந்த நேரத்தில் இந்த கோரத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.

போட்டி முடிந்ததும் மைதானத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

சாலமன்கா மேயர் சீசர் பிரிட்டோ, இந்த வன்முறையை இப்பகுதியில் நிலவும் “பரந்த குற்ற அலையின்” (Crime Wave) ஒரு பகுதி என்று கவலை தெரிவித்துள்ளார். மேலும், மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமிடம் வன்முறையைக் கட்டுப்படுத்த கூட்டாட்சிப் படைகளின் உதவியைக் கோரியுள்ளார்.

“அதிகாரிகளைத் தங்களுக்குக் கீழ் கொண்டுவர குற்றவியல் கும்பல்கள் முயல்கின்றன, ஆனால் அவர்களால் எதையும் சாதிக்க முடியாது,” என மேயர் பிரிட்டோ உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin