கால்பந்து விளையாடியபோது மாணவி மயங்கி விழுந்து பலி!

கால்பந்து விளையாடியபோது மாணவி மயங்கி விழுந்து பலி!

ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவியின் திடீர் மறைவு, சக மாணவ மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மகள் திவ்யதர்ஷினி (17). இவர் இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி கணினி அறிவியல் படித்து வந்தார்.நேற்று மதியம் 1 மணியளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் திவ்யதர்ஷினி உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.

மாணவி மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், அவரை மீட்டு உடனடியாகக் காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், திவ்யதர்ஷினி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin