கொல்கத்தாவின் கோட்டையில் பஞ்சாப்பின் ருத்ர தாண்டவம்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியினர் உலக சாதனையுடன் அபார வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

261 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியினர் 18.4 ஓவர்களின் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெற்றியை தனதாக்கியுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் T20 வரலாற்றில் அதிக கூடிய வெற்றி இலக்கை துரத்திடியதமைக்கான உலக சாதனையை பஞ்சாப் அணி முறியடித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் இடம்பெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இப்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்கு எதிரான போட்டியில் 224 என்ற இலக்கை ராஜஸ்தான் ரோயல்ஸ் துரத்தியடித்திருந்தது.

இதுவே ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக துரத்தியடிக்கப்பட்ட அதிகூடிய ஓட்டமாக இருந்தது.

எனினும், இன்றையப் போட்டியில் அந்த சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி முறியடித்துள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற இன்றையப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவுசெய்தனர்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 261 ஓட்டங்களை குவித்தனர்.

பில் சால்ட் 75 ஓட்டங்களையும், சுனில் நரைன் 71 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

262 என்ற வெற்றி இமாலய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியில் 18.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன் மூலம் எட்டு விக்கெட்டுகளால் பஞ்சாப் அணியினர் வெற்றிபெற்றுள்ளனர்.

பஞ்சாப் அணி சார்பில் ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்காது 108 ஓட்டங்களையும், ஷஷாங்க் சிங் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இன்றையப் போட்டியில் மொத்தமாக 42 ஆறு ஓட்டங்கள் அடிக்கப்பட்டிருந்தது.

Recommended For You

About the Author: admin