தைவானின் கிழக்கு மாகாணமான ஹுவாலியன் அருகே சற்று முன்னர (சனிக்கிழமை அதிகாலை) 6.1 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அந்நாட்டு வானிலை மையம் இதனை உறுதிப் படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 24.9 கிமீ (15.5 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததாக தைவான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தைவானில் இந்த மாத தொடக்கத்தில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததுடன், இதில் 17 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.